வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!
Thursday, September 14th, 2023
மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக் கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக யாழ் மாவட்ட செயலகம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.
மோட்டார்வாகன போக்குவரத்து தலைமை அலுவலகத்திலிருந்து 2023.01.01 ஆம் திகதிமுதல் 2023.06.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் 2023 ஒக்ரோபர் மாதம் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன.
மேற்படி வாகன இலக்கத்தகடுகளை, வாகன உரிமையாளர்கள் வாகனப்பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை, பழைய வாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொறித்த ஒட்டும் தாள் என்பவற்றை, 2023.09.30 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்படி வாகன இலக்கத்தகடுகளின் பட்டியல் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106