பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் – அனைத்து அரச ஊழியர்களுக்கும் சீன அரசு பணிப்பு!

Sunday, September 10th, 2023

சீனாவில் அனைத்து அரச ஊழியர்களும் தங்களது பணி நேரத்தின் போது ஐ போன் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

சீன அரசாங்கம் முன்னதாக குறிப்பிட்ட சில அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் இவ்வறிப்பினை விடுத்திருந்த நிலையில் தற்போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இம்மாத இறுதியில் புதிய தொழிநுட்பத்திலான ஐ போன் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

அத்துடன், ஐ போன் பயன்பாட்டிற்கு மாத்திரமின்றி அரச அலுவலகங்களுக்கு கொண்டுவருவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.  

சீன அரசாங்கத்தின் இந்த பணிப்புரைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இதுவரை எவ்வித விமர்சனங்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106