கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தி – அடுத்த வருடம் ஜூன் முதலாம் திகத முதல் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, September 9th, 2023

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் செயற்பாடுகளை அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளுக்காக முதற்கட்டமாக 12 அதிநவீன பாரந்தூக்கிகளை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் செயலாளர் தெரிவித்தார்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 20% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அதானி நிறுவனத்தின் முதலீடாக அமைந்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்காக 850 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படுகின்றது. அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் இதன் முதற்கட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106