இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆரம்பம்!

Saturday, September 9th, 2023

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து இதன்போது ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா ஆகிய அபிவிருத்தியடைந்த நாடுகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், ஜி-20 உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இந்தியாவிற்கு வருகை தர இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்பென் நாட்டின் துணை ஜனாதிபதி நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106