சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வருகை – நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Thursday, September 7th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே அந்த குழு நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 4.30க்கு விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரவு 7 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106