இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

Monday, September 4th, 2023

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை அதிகரித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,127 ரூபாவாகும்.

05 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 587 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறி...
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் அதிகாரபூர்வமாக்கும் யோசனை தொடர்பில் அரசாங்கம் இன்னும...
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது.- பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது - தமி...