ஏதிலி கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எரிற்ரியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதலில்!
Sunday, September 3rd, 2023
ஏதிலி கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எரிற்ரியர்களுக்கு (Eritrean) எதிராக இஸ்ரேலிய காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல் அவிவியில் (Tel Aviv) இடம்பெற்ற போராட்டங்களை கட்டுபடுத்தும் நோக்கில் ஸ்டன் ரக கையெறி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கடற்பாசி முனை தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான துப்பாக்கி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதா? என்பதை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதிலிகள் தொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட தூதுவராலய நிகழ்வொன்றை ரத்து செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேநேரம் மகிழுந்து மற்றும் பல வர்த்தக நிலையங்கள் என்பன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் சுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் பலர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்திய தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106