ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு இலங்கையில் – அமைச்சர் மஹிந்த அமரவீரவின் யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, August 29th, 2023

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 வது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், அரசாங்கத்தின் ஆதரவை பெறுவதற்கு நேற்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

குறித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி தகவல்!
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதை தொடர்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுத்துறை அமைச்...