அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தகவல்!
Saturday, July 1st, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய பிரதான நாணய பெறுமதிகளுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடும்போது ரூபாவின் பெறுமதி 19.8 சதவீதமும், யூரோவுடன் ஒப்பிடும்போது 14.5 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்திய ரூபாவுடன் ஒப்பிடும்போது 16.5 சதவீதமும் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடும்போது 27.7 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டில் 10 நாட்களில் 591 பேர் மரணம் 21 ஆயிரத்து 344 பேருக்கு தொற்றுறுதி - சுகாதார அமைச்சர் பவித்திர...
சர்ச்சைக்குரிய கண்புரை சத்திரகிசிச்சை விவகாரம் - இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை!
லேரியாவுக்கு எதிரான மிக மலிவான தடுப்பூசியை அங்கீகரித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!
|
|
|


