ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகும்’ – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு!
Sunday, August 27th, 2023
ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகுமென நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அதனால் தான் இரண்டு மாதங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு புதிய சட்டத்தின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது!
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் எதிர்வரும் 3...
சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் பெண்கள் – சர்வதேச மகளிர் தின செய்த...
|
|
|


