பல்கலை அனுமதி விண்ணப்பத்திற்கு பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Monday, May 24th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
அத்தோடு விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள கிராம அலுவலகரின் சான்றிதழ்களை தனியார் விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கீரிமலை நீர்த்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு!
போராடி மரணிக்கவும் தயார் -ஞானசாரர்
பருவகாலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை 95 முதல் 110 ரூபாவுக்கு இடையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை -...
|
|
|


