அடையாள அட்டை விநியோகம் வழமைக்கு – ஆட்பதிவுத் திணைக்களம்!
Friday, November 15th, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடனடியாக அடையாள அட்டையை பெறவிரும்புபவர்கள் நாளையும் திணைக்களத்திற்கு வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க கூறினார்.
கொழும்பில் உள்ள பிரதான காரியாலயம் தவிர காலி மாவட்ட காரியாலயத்தின் ஊடாகவும் அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது என்றும்ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வாக்களிப்பிற்கு மாத்திரம் பயன்படுத்தக்கூடிய இரண்டு லட்சம் தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.
Related posts:
காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்!
உரிய விலை இன்மை – முருங்கை செய்கையாளர்கள் கடும் பாதிப்பு!
தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரும் சக்திமிக்க தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
|
|
|
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் - உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வ...
உடன் அமுலாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு - அமைச்சரவைப் பத்த...
பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுகின்றன...


