பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!
Wednesday, August 23rd, 2023
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயம் 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று(23) சபையில் அறிவித்தார்.
பொதுமக்களின் அமைதியைப் பேண நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருமாறு இக்கட்டளை மூலம் இலங்கைத் தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய கடற்படை இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க!
புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு - அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையு...
தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் - இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீக...
|
|
|


