சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் – பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

Tuesday, August 22nd, 2023

சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அரசியல் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான அதி முக்கியத்தும் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பொதுவான பாதுகாப்புக் கவலைகளைத் திறம்பட நிவர்த்தி செய்ய நிலையான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்பதாக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (21) காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எரிபொருளின் விலை வீழ்ச்சி அரசுக்கு ரூ 600 மில். மீதம் - கூட்டு எதிர்க்கட்சி எம். பி. பந்துல குணவர்தன...
தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
அரச துறைக்கு 2024 ஆம் ஆண்டுமுதல் முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...