இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 15 ஆயிரத்து 330 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 89ஆயிரத்து 724 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து, 10 ஆயிரத்து 184 பேரும், சீனாவிலிருந்து 5 ஆயிரத்து 963 பிரஜைகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.

மேலும், ஜேர்மனியில் இருந்து 5 ஆயிரத்து 141 பேரும், ரஷ்யாவில் இருந்து 4 ஆயிரத்து 561 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை - பி...
தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் - துறைசார் மேற்பார்வைக் குழுவி...