ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!
Monday, August 21st, 2023
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அந்த அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் (Ajith Agarkar) செய்தியாளர்களை நாளை, சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
அதேபோல் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கும், நீக்கப்பட்டதற்குமான விளக்கங்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவுள்ளது. அதில் அந்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண சர்ச்சை தொடர்பில் முரளி கருத்து!
உலகக் கோப்பை தொடரிலிருந்து இலங்கை பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விலகல்!
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்!
|
|
|


