அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
Monday, August 21st, 2023
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது.
இதேநேரம் கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 28 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 59 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 49 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு
சமையல் எரிவாயுவின் புதிய விலை அமுலுக்கு வந்தது!
கிராம உத்தியோகத்தர்களின் பணி நேரம் தொடர்பில் விஷேட சுற்றுநிரூபம் - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள...
|
|
|


