கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் – முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சந்திப்பு – புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாக பிரஸ்தாபிப்பு!

Monday, August 21st, 2023


~~~~

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(21.08.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணிகளை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் வலுப்படுத்த முடியும் என்பதை அதிகாரிகள் மத்தியில் வலியுறுத்தி வருகின்ற கடற்றொழில் அமைச்சர், புலம்பெயர் முதலீட்டாளர்களின் பங்களிப்பிற்கான கோரிக்கையை முன்வைத்து வருவதுடன் தனியார் முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்பினையும் ஊக்குவிப்பினையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – 21.08.2023

Related posts:

தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்...
யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எ...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...

வெளிப்படைத் தன்மையுடன் மீளாய்வு செய்து சேவை மூப்பின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் – சுகாதாரத் த...
மந்திகை பால் சாலை விவகாரம் - மீளவும் இயக்க நடவடிக்கை எடுத்து தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!
ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!