இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் – கல்வி அமைச்சு எச்சரிக்கை!
Friday, August 18th, 2023
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு ஆசிரியர்களுக்கு பல முறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவுகளை பொருட்படுத்தாமல் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் முன்பு இருந்த பாடசாலைகளிலேயே சேவை புரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சேவையின் தேவையின் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் உள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் – சஜித்!
தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சர...
அமரர் கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை!
|
|
|


