தேர்தல் சீர்திருத்தத்திற்கான இறுதி முடிவு எதிர்வரும் 15இல் வெளிவரும்!
Tuesday, September 6th, 2016
புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,வாக்காளர்கள் தங்களது பெயர் விபரங்கள் அடங்கியுள்ளதா என்பதை http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர்அறிவித்தார்.
குறித்த இணையத்தள முகவரியில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் தங்களது விபரங்களைப் பார்வையிடக்கூடியவாறு அமைந்துள்ளது.

Related posts:
பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
|
|
|


