இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் – செப்டம்பரில் கடமைகளை பொறுப்பேற்பாரெனவும் தகவல்!
Monday, August 14th, 2023
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பரில் தனது கடமைகளை நிறைவு செய்யும் மிலிந்த மொரகொடவுக்குப் பின் அவர் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கமைய சேனுகா செனவிரத்ன தற்போது ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகிறார்.
முன்னதாக அவர் வெளிவிவகார செயலாளராக பணியாற்றியதுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உயர் ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு!
இலங்கை வரலாற்றில் தபால் திணைக்களதுக்கு இம்முறை அதிக வருமானம் கிடைத்துள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்ப...
4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை – உடன் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ...
|
|
|


