பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Sunday, August 13th, 2023
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பாரவூர்திகளுக்காக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரத்துக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்கம் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106