ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள இணைக்க விஷேட நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை!

Saturday, August 12th, 2023

ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று  (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் மாகாண சபைகளில் உள்ளதால் அந்த குழுவை இணைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் –

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்கு அறிவிக்கப்படும் எனவும், இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டால் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவர்கள் அனைவரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னரும் 26 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106