இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் – பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

Friday, August 11th, 2023

இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவு, பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்பட்டது.

1974 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்தோ – இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்’ கீழ் கச்சத்தீவை இலங்கையின் பகுதியாக ஏற்றுக்கொண்டார்.

எனவே, காங்கிரஸ்காரர்கள் அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள் என்று மக்களவையில் தமது அரசாங்கம் மீது கொண்டு வரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணைக்கு பதிலளிக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தினார்

இந்தநிலையில் கச்சத்தீவை இந்தியாவிற்கு மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பில், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் தொடர்ந்தும் கடிதம் எழுதி வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106