நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை – மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
Wednesday, August 9th, 2023
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மொட்டு சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் - மஹிந்த ராஜபக்ஷ!
இலங்கைக்கு அருகே மற்றுமொரு சூறாவளி உருவாகும் சாத்தியம் - பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயம் - இலங்கையின் பல்லுயிர்ச் செயலகம் சுட்டிக்காட்டு!
|
|
|


