வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை – வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும்  தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை உற்பத்தின் பண்ணையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறான திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா, வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இலங்கையில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதழிகமானோர் பாதிப்பு : 941 உயிரிழப்புகள் பதிவா...
மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை - சுகாதாரத்துறை பிர...