வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் – 300 அமெரிக்க டொலராக உயர்வு!
Tuesday, September 6th, 2016
எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், 300 அமெரிக்க டொலராக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.மேலும் பல நாடுகளுடன் இது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.இதற்கமைய, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்காக குறித்த குறைந்தபட்ச ஊதியத்தினை அமுல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் – கோட்டாபய ராஜபக்ச ...
வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு - உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவட...
|
|
|


