அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி அதிர்ச்சி தோல்வி!

Sunday, March 27th, 2016

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள  அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர் தேர்வு தற்போது நடைபெறுகின்றது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு  துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், வெர்மோன்ட் செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதுவரை நடந்த போட்டிகளில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் நேற்று அலாஸ்கா மற்றும் வொஷிங்டன் மாகாணங்களில் தேர்தல் இடம்பெற்றது. அதில் இருவரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இறுதியில் நடந்த வாக்கெடுப்பில் இந்த 2 மாகாணங்களிலும் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார்.

வொஷிங்டனில் ஹிலாரிக்கு 24 சதவீத வாக்குகளும், சாண்டர்சுக்கு 76 சதவீத வாக்குகளும் கிடைத்தன. அலாஸ்காலில் ஹிலாரிக்கு 21 சதவீதமும், சாண்டர்சுக்கு 79 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் பின் தங்கிய நிலையில் இருந்த சாண்டர்ஸ் ஹிலாரியை நெருங்கி வருகிறார்.

நேற்று ஹவாயிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் மாதம் இறுதி வரை நடக்கிறது. அதில் கட்சியின் 2,383 நிர்வாக குழு உறுப்பினரின் ஆதரவை பெறுபவர் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106