பேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு- தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த!

Tuesday, September 6th, 2016

நாட்டில் பேஸ்புக் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

இதில் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழையும் சம்பவங்கள் தொடர்பாகவும் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாகவும் அதிகம் முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இணையங்களுக்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து அதன் தகவல்களை மாற்றியுள்ளமை தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதேவேளை இணையம் ஊடாக நிதி மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பாக இதுவரை 5 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவிற்கும் முறைப்பாடு செய்வதன் ஊடாக உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

facebook



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106