உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் வாயிலாக உண்மையை கண்டறிய முடியும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Thursday, July 27th, 2023
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்..
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த, ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மீண்டும் வரும்போது நல்ல முடிவுடன் வருவேன் - முன்னாள் ஜனாதிபதி !
பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - தமிழ் அரசியல் கைதிகள்!
18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 2022 ஆம் ஆண்டிற்குரிய தேருநர் இடாப்பில் தம்மைப் பதிவு செய்து கொள்வதற்கு...
|
|
|


