இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் – இந்திய அதிகாரிகள் தெரிவிப்பு!
Monday, July 24th, 2023
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வணிகக்கல்வி சார்ந்த நிகழ்வுகளை சகல பாடசாலைகளிலும் நடத்துக!
சிவனொளிபாதமலையில் கற்சரிவு - மூன்று யாத்திரிகள் காயம்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை - அமெரிக்க தூதரகம் தெரிவிப்...
|
|
|


