நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
Sunday, September 20th, 2020
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இதனூடாக வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எழுத்து மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் வீண் பணச்செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீண் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசையில் இத்தகைய ஆவணங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் ஏனைய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை!
மக்களை ஏமாற்றுகிறது யாழ் மாநகர சபையின் பாதீடு: தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!
யாழில் பெற்றோரின் முறையான கண்காணிப்பு இன்மையாலேயே அதிகளவு வன்முறை சம்பவங்களுக்கு காரணம் - மாவட்ட பிர...
|
|
|


