போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
Sunday, July 23rd, 2023
அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6,192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் எரிபொருள் இருப்பில் சில குறைப்புக்கள் காணப்பட்ட போதிலும், அது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்மாவட்டத்தில்அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் ஏற்பாடு - மாவட்டச் செயலகம் அறிவிப்ப...
ஜனாதிபதி தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!
இஸ்ரேல் பிரதமர் வீட்டைக் குறிவைத்து தாக்குதல்!
|
|
|


