யாழ் – கொழும்பு சொகுசு ரயில் சேவை ஆரம்பம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
Saturday, July 22nd, 2023
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி ரயில் சேவை இடம்பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த ரயில் சேவைக்கான கட்டணம் 4,000 ரூபாய் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கட்டார் தொடர்பில் அமைச்சரவையில் சிறப்பு அறிக்கை!
பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்தியாக உள்ளது - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவ...
|
|
|


