குமுதினிக்கு சமநிலை பரிசோதனை!

Wednesday, July 19th, 2023

மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் வைத்து வல்வெட்டித்துறை – நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன்  என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில்,

கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் - எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப...
சுற்றுலாப் பிரதேசங்களை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அத...
உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உதிமை மனு தாக்கல் செய்ய தயாராகும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!