வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, January 11th, 2022

வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் ‘சொந்துரு மஹால் நிவாச’ என்ற வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாமையால் வாடகை வீடுகளில் வாழ்கின்ற, உண்மையான வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட குடும்பங்களுக்கு நியாய விலைக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் சொந்துரு மஹல்  எனும் பெயரிலான வீடமைப்புத் திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டடப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் ஆரம்பத் தொகையாகச் செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டியதுடன், வீட்டுப் பெறுமதியின் எஞ்சிய தொகை வருடமொன்றில் தவணைக் கட்டணமாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப வங்கியின் மூலம் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் - அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெ...
பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் வலியுறுத்து!
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம் - ஜனாதிபதி தெரிவிப்பு!