இலங்கையில் பால் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கு பிரான்ஸ் நிதியுதவி!
Tuesday, July 18th, 2023
நாட்டின் பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு பிரான்ஸ் இணங்கியுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரான்ஸ் முகவர் நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரித்தல், பாலின் தரத்தை அதிகரித்தல் மற்றும் கறவை பசுக்களை பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது இருக்க விஷேட ஏற்பாடு!
கைச்சாத்தானது ஹம்பாந்தோட்டை உடன்படிக்கை!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் - எரிபொருள் வழங்க தயாராகும...
|
|
|


