யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ரயில் சேவைக்கான கட்டண விபரம் அறிவிப்பு!

Sunday, July 16th, 2023

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ் தேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 2800 ரூபாய் என்றும் 2 ஆம் வகுப்பு – 1900 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரவு நேர தபால் ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாய் என்றும் 2 ஆம் வகுப்பு – 2200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகர்சேர்கடுகதி ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கியதும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ளது. அதற்கான கட்டணம் 4000 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிபபிடத்தக்கது.

000

Related posts:


பரிசோதனையைத் தவிர்ப்பவர்களி வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை - மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடுமைய...
அடுத்த வருடம் புதிய 10 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புக்கள் நாட்டிற்குக் கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர்...
மின்ஜம் சூறாவளி இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...