வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Saturday, July 15th, 2023
அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகள், புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல், தங்களுடைய – தங்களை சார்ந்த மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக கருதி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத் திட்டத்தில், வடக்கின் ஔிமயம் எனும் தொனிப் பொருளில் யாழ் முற்றவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். – 15.07.2023
000
Related posts:
காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
கிளிநொச்சி மாவட்ட தடுப்பூசி வழங்கல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிக...
மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது - அடிபணிந்தே இருக்க வேண்டும் என எண்ணும் சிலரே குந்த...
|
|
|


