டிஜிட்டல் சேவை வரி குறித்து இலங்கையுடன் கலந்துரையாடவில்லை – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!
Thursday, July 13th, 2023
டிஜிட்டல் சேவை வரி குறித்து தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கையுடன் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய வரிகளை அமுலாக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதற்கு பதிலளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கருத்துரைக்கையில், பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒழுங்கமைப்புகள் சர்வதேச உடன்படிக்கையில், கைச்சாத்திடுவதா இல்லையா என்ற எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?
2024 ஆம் ஆண்டுக்குரிய ஆதன வரி அறிவித்தல் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் விசேட அறிவிப்பு!.
நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரிப்பு - மக்கள் பெருங்கவலை!
|
|
|


