சீரற்ற காலநிலையால் 14,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன – சபையில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!
Thursday, July 6th, 2023
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் 14,000க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகி உள்ளதாகவும், 50,000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் அதிகளவான வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு - விக்டர் ஐவன் !
மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண...
கடமைக்கு சமுகமளிக்காது வெளிநாடு சென்றுள்ள முப்படையினருக்கு பொதுமனிப்பு - பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்...
|
|
|


