லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்பட்டது!

Tuesday, July 4th, 2023

இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

விலைத்திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2 ஆயிரத்து 982 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 83 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ஆயிரத்து 198 ரூபாவாகும்.

இதுதவிர, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 37 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 561 ரூபாய் என்ற புதிய விலைக்கு அதனை விற்பனை செய்யவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106