ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டக்காஃபோமி கடோனோ நியமனம்!
Tuesday, July 4th, 2023
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக டக்காஃபோமி கடோனோ (Takafumi Kadono) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி முன்னாள் இயக்குனராக சென் சென்னுக்குப் பின்னர் டக்காஃபோமி கடோனோ பதவியேற்றுள்ளார்.
ஜப்பானிய நாட்டவரான, டக்காஃபோமி கடோனோ, கிழக்கு ஆசிய பிராந்தியத் துறையில் இளம் நிபுணராக 2006ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைந்தார்.
பின்னர் அவர் மத்திய, மேற்கு ஆசிய திணைக்களம் மற்றும் தென்கிழக்கு ஆசிய திணைக்களத்தில் எரிசக்தி நிபுணராக பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கப்பல்களை பாதுகாக்க நெதர்லாந்துடன் ஒப்பந்தம்!
கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – தொற்றாளர் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 40 ஆயிர...
அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி - வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம...
|
|
|


