நாட்டுல் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவு – , நோயாளிகளும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு
Monday, July 3rd, 2023
இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவின்படி, நேற்று வரை 49 ஆயிரத்து 559 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 24 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
அத்துடன், ஜூன் மாதத்தில் 9 ஆயிரத்து 916 டெங்கு தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஜனவரி 2023 க்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் பதிவான அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற...
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான தாய்ல...
|
|
|


