புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் பரீட்சை ஆணையாளர் வலியுறுத்து!

Tuesday, January 18th, 2022

சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தமுறை 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

அத்துடன் பரீட்சை இணைப்பு நடவடிக்கைகளுக்காக 496 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது..

இந்த பரீட்சையின்போது, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற சகல மாணவர்களும், ஆசிரியர்களும், மண்டப பொறுப்பாளர்களும், செயற்குழுவினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டீ தர்மசேன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம்...
அநுர ஆட்சியில் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் 136 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை ...

நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை - தனிமைப்படுத்தல் பக...
அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக விசாரணை இடம்பெறுகின்றது - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி அமைச்ச...
நுகர்வோர் அதிகார சபை திடீரென மேற்கொண்ட பரிசோதனை - 8 வழக்குகள் பதிவு என மாவட்ட செயலர் தெரிவிப்பு!