உலகக்கிண்ண கிரிக்கெட் – சுப்பர் சிக்ஸ் சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை!
Saturday, July 1st, 2023
உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுப்பர் சிக்ஸ் சுற்றை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
நெதர்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
புலவாயோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 96 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்களையும் இழந்தது.
எனினும், சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வா 93 ஓட்டங்களைப் பெற்று அணியை ஸ்திரப்படுத்தினார். இலங்கை அணி 47.4 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
நெதர்லாந்து அணி துடுப்பெடுத்தாட களமிறங்கிய போதிலிருந்து இலங்கை அணி வீரர்கள் பந்துவீச்சில் பிரகாசித்தனர்.
இதனால் நெதர்லாந்து அணியால் 40 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
மஹீஷ் தீக்சன 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க , தசுன் சானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியிரந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106