ஒகஸ்ட் மாதம்முதல் மீற்றர் பொருத்துவது கட்டாயம் – யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு !

Saturday, July 1st, 2023

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்முதல் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (30) அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16, 17, மற்றும் 18ஆம் திகதிகளில் கட்டண மீற்றர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளது.

எனவே யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீற்றர்களை பொருத்தி, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது.

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்படையாமல் இருக்கவும் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106