‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவு விவகாரம் – இதுவரை 4 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக அறிவிப்பு!
Friday, June 30th, 2023
‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவு வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படாதவர்களிடமிருந்து இதுவரை 4 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக, நலன்புரிக் கொடுப்பனவு சபை தெரிவித்தது. அத்துடன், ஆறாயிரத்துக்கும் அதிகமான ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அச்சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்காக காலஅவகாசம் வழங்கியிருந்ததாகவும் அக்காலத்துக்குள் அதற்காக விண்ணப்பிக்க முடியாதவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அக்கால அவகாசத்தை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிவரை நீடித்துள்ளது.
எவ்வாறெனினும், தகைமையுடையோர் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு நலன்புரிக் கொடுப்பனவு கிடைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும், அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106