டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு எச்சரிக்கை!
Tuesday, June 27th, 2023
நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயாளர்களில் 75 வீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் இதற்கு முன்னர் சிறுவர்களிடையே அதிகளவில் காணப்பட்ட போதிலும், தற்போது இளைஞர்களே அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!
யாழில் எரிவாயு கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!
அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோர...
|
|
|


