ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – புடின் அதிரடி அறிவிப்பு!
Saturday, June 24th, 2023
ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அனைவரும் ‘துரோகிகள்’ என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
நாடு துரோகத்தை எதிர்கொள்கிறது என்றும் இதற்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்திற்கு உரிய அனைத்து உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் வாக்னர் கிளர்ச்சியானது இராணுவத்தின் முதுகில் குத்தும் செயற்பாடு என்றும் கண்டித்துள்ளார்.
மேலும் வாக்னர் தலைவர் கைப்பற்றியதாக கூறப்படும் தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் நிலைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
முன்பதாக ரஷ்யாவின் இராணுவத் தலைமையை கவிழ்க்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் அறிவித்துள்ள நிலையில் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுதமேந்திய கலகத்தைத் தொடங்கியதற்காக வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு எதிராக ரஷ்யா கிரிமினல் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
உக்ரைன் படையெடுப்பின் போது ரஷ்ய இராணுவத்திற்கு உதவுவதற்காக கூலிப்படை குழு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை அடுத்து வாக்னர் குழுவின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஷின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் எல்லையைத் தாண்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் தெற்கு லிபெட்ஸ்க் பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய தலைநகரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பை வலுப்படுத்த வீதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மொஸ்கோ மேயர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106